வலுவான நீதித்துறை அமைப்புடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது குழுவுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகம் தனித்துவமானது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடம் தேவையில்லை என்றார. புதுதில்லியில் நேற்று நடைபெற்ற இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் 70-வது அமைப்பு தின விழாவில் உரையாற்றிய […]

வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை வசதிகளைப் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே 2024 மார்ச் 28-29 தேதிகளில் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின்போது, ஓகாவில் மிதவை விமானப் பராமரிப்புப் பிரிவின் உள்கட்டமைப்பை 2024, மார்ச் 28 அன்று அவர் தொடங்கி வைத்தார். வேராவல் இனாஸ் கிராமத்தில் கடலோர காவல்படையில் திருமணமாகாதோர் மற்றும் திருமணமானோருக்கான தங்குமிடங்களை திருமதி காயத்ரி அரமானே 2024, மார்ச் 29 அன்று திறந்துவைத்தார். ஓக்காவில் […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் பணியாளர்கள் இது வரை பெற்று […]

நடப்பு 2024-ம் ஆண்டிற்கான ராணுவத் தளபதிகளின் மாநாட்டை புதுதில்லியில் மெய்நிகர் முறையில் 2024 மார்ச் 28 ஆம் தேதியும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01, 02-ம் தேதிகளில் நேரடியாகவும், நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் ராணுவத் தலைவர்களிடையே உரையாற்றுகிறார். இந்த மாநாடு இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமைக்கு கருத்தியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு […]

2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை 28.03.2024 அன்று வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 26.04.2024 அன்று நடைபெறும். முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி […]

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 94 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.  அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. […]

இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார் (ஒரு சிறப்பு மாசு கட்டுப்பாட்டு கப்பல்), மூன்று நாள் பயணமாக நேற்று பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவைச் சென்றடைந்தது. பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதைத் தவிர, ஆசியான் பிராந்தியத்தில் கடல் மாசுபாடு குறித்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக சிறப்பு […]

கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது , மருத்துவமனைகளில் தீ விபத்து ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறும். இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது, இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதில் முன்முயற்சி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் […]

கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர். இந்த […]

ரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் இந்தியன் ரயில்வே புதிய முறையை ஜூலையில் அறிமுகம் செய்கிறது. இனி ரயிலின் பான்ட்ரிகார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது. உணவு தயாரிப்பு ஒப்பந்தம் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையை தொடங்குவர். இதன்படி, வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு ரயில்களில் உள்ள பேண்ட்ரி கார் பெட்டிகளில் பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது. இந்த மாற்றத்துக்குப் பிறகு பேண்ட்ரி காரில் தண்ணீரை சூடாக்கலாம் அல்லது தேநீர் […]