இந்தியக் கடலோரக் காவல்படை வசதிகளை பார்வையிட்ட பாதுகாப்புத்துறை செயலாளர்

Indian Coast Guard

வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை வசதிகளைப் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே 2024 மார்ச் 28-29 தேதிகளில் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின்போது, ஓகாவில் மிதவை விமானப் பராமரிப்புப் பிரிவின் உள்கட்டமைப்பை 2024, மார்ச் 28 அன்று அவர் தொடங்கி வைத்தார்.

வேராவல் இனாஸ் கிராமத்தில் கடலோர காவல்படையில் திருமணமாகாதோர் மற்றும் திருமணமானோருக்கான தங்குமிடங்களை திருமதி காயத்ரி அரமானே 2024, மார்ச் 29 அன்று திறந்துவைத்தார். ஓக்காவில் அமையவிருக்கும் 200 மீட்டர் இந்தியக் கடலோரக் காவல்படை துணைத்துறைமுகக் கட்டுமானப் பணிகள் குறித்தும் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கப்பட்டது. தனது பொறுப்புப் பகுதியில் தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடலோரக் காவல்படையின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சிகளில் இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால், பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.கே.ஹர்போலா மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய தலைமையகம் (வடமேற்கு) 2009, டிசம்பர் 16 அன்று காந்திநகரில் நிறுவப்பட்டது. குஜராத், டாமன் மற்றும் டையூவில் உள்ள கடல்சார் மண்டலங்களில் இந்திய கடலோர காவல்படையின் கடப்பாட்டு சாசனத்தை இது செயல்படுத்துகிறது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

C-Vigil app: தேர்தல் செயலியில் இதுவரை 79,000 விதிமீறல் புகார்கள் பதிவு...

Sat Mar 30 , 2024
தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000-க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. […]
cVIGIL App

You May Like