ராணுவத் தளபதிகளின் மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு

நடப்பு 2024-ம் ஆண்டிற்கான ராணுவத் தளபதிகளின் மாநாட்டை புதுதில்லியில் மெய்நிகர் முறையில் 2024 மார்ச் 28 ஆம் தேதியும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01, 02-ம் தேதிகளில் நேரடியாகவும், நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் ராணுவத் தலைவர்களிடையே உரையாற்றுகிறார்.

இந்த மாநாடு இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமைக்கு கருத்தியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்கும், மதிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய அமைப்பாக செயல்படுகிறது. எதிர்கால வழிகாட்டுதலுக்கான பாதையை வகுப்பதற்கு, முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு உதவும் முக்கிய முன்னுரிமைகளை இது வகுக்கும்.

2024 மார்ச் 28 அன்று தொடங்கி, புதுதில்லியில் உள்ள ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், ராணுவத் தளபதிகள் அவர்களுடைய தலைமையகத்திலிருந்து மெய்நிகர் முறையில் பங்கேற்பார்கள். ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் நலன் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கான தாக்கங்கள் குறித்து புகழ்பெற்ற தொடர்புடைய நிபுணர்களின் உரைகளும் இடம்பெறும்.

ஏப்ரல் 01  அன்று நேரடி முறையில் நடைபெறும் மாநாட்டின்  போது, ராணுவத்தின் உயர்மட்டத் தலைமை உத்திசார்ந்த விவகாரங்கள் குறித்த அமர்வுகளில் ஈடுபடும்.

Ajayraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

``ஒரு வாக்கு கூட மிஸ் ஆக கூடாது” தேர்தல் ஆணையம் நடவடிக்கை...

Thu Mar 28 , 2024
ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் என்றும் இதற்காக பல புதிய நடைமுறைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல […]
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

You May Like