ஸ்மார்ட்போனை நமது பக்கத்தில் வைத்து கொண்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?

1
sleep smartphone

ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெட் செட்டை பயன்படுத்தவும். ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள். செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள்.

இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும்.

இரவு நேரத்தில் உறங்கும் முன் முழு இருளில் செல்போன் பார்ப்பதால் செல்போனில் இருந்து வரக்கூடிய வெளிச்சம் நம் கண்களில் இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளை தளர்வடைய செய்து பாதிப்படைய செய்கிறது. செல்போனை உங்கள் அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது அது வெளிவிடும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஹார்மோன்தான் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.

Neelan

One thought on “ஸ்மார்ட்போனை நமது பக்கத்தில் வைத்து கொண்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடி தேர்தல் களம்: பாஜக முடிவு... திமுக குஷி..!

Sun Mar 24 , 2024
தூத்துக்குடி பார்லி., தொகுதியில் பாஜ வேட்பாளரைதான் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாக்குமரி பாஜ வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனிடம் கட்சியினர் அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள லோக்சாபா தேர்தலில் பாஜவின் தேசிய கூட்டணியில் தமிழகத்தில் பாமக, த.மா.கா., அமமுக, தமமுக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் உள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் பாஜ போட்டியிடும் 20 இடங்களில் […]
DMK - BJP

You May Like