மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நியாயமான, அமைதியான, எளிதில் அணுகக்கூடிய, அனைவரும் பங்கேற்கும் சுதந்திரமான தேர்தலுக்கு ஆணையம் உறுதி பூண்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் முதல் கட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார்,  சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் […]

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில […]

ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், மீனவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏற்கெனவே ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் இருக்கும் திட்டம் என்பதால், தேர்தல் விதிமுறைகள் இதற்கு அனுமதிக்கின்றன. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் கிழக்கு கடலோரப் பகுதிகள் வரை ஏப்ரல் 15 முதல் […]

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 19 […]

மும்பையில் கடந்த 3-ம் தேதி துவங்கி, தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 5) நிறைவடைந்தது. இந்த முறையும், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடர்கிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி […]

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் காரில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது […]

தாழையூத்து – திருநெல்வேலி: இந்தியா சிமெண்ட் நிர்வாகத்தால் நடத்தப்படுகிற சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளியின் 67 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெடின் சங்கரி ஆலை துணைத் தலைவர். ஆ. வீரபாகு தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை பள்ளிச் செயலாளர் ரா.வெ.ஸ்ரீனிவாசன் வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் உ. கணேசன், வாசித்தார். இந்தியா சிமெண்ட்ஸ் ஆலைத் தலைவர் கோ.சரவணமுத்து முன்னிலை […]

சார் – பதிவாளர்கள், தகுந்த காரணம் இல்லாமல் பத்திரங்களை நிலுவையில் வைப்பதை தடுக்கும் வகையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் படி, 1. பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் – பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, ‘ஸ்டார் 2.0 ‘மென்பொருளில், ‘டிராப் டவுன் பாக்ஸ்’ என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும் 2. ஆவணதாரர் கோரிக்கை அடிப்படையில், […]

மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் […]

வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அவை நாணய ஏற்ற இறக்கங்கள் […]