ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் : மீனவர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 நிவாரணம்

Fishing Boat

ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், மீனவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது ஏற்கெனவே ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் இருக்கும் திட்டம் என்பதால், தேர்தல் விதிமுறைகள் இதற்கு அனுமதிக்கின்றன. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் கிழக்கு கடலோரப் பகுதிகள் வரை ஏப்ரல் 15 முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி தொடங்கி, திருவள்ளூர் மாவட்டம் வரையான கிழக்கு கடலோரப் பகுதிகளில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

இத்தடைக் காலத்தில் விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், மானிய விலையில் வழங்கப்படும் டீசலும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கரையோரப் பகுதிகளில் மீன் பிடிக்கும் நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் வழக்கம் போல் கடலுக்குள் மீன்பிடிக்கலாம்.

மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் மீனவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Sat Apr 13 , 2024
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில […]
Rain

You May Like