தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் என்று […]