4-வது முறையாக முதலமைச்சரானார் சந்திரபாபு நாயுடு; பிரதமர் மோடி வாழ்த்து

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணி கட்சியினர் கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அப்துல் நசீர் செவ்வாய் கிழமை இரவு அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து, விஜயவாடா விமான நிலையம் அருகே கேசரபல்லி எனும் இடத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் பதவி ஏற்பு விழா வெகு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் நிறுத்த சுமார் 60 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பதவியேற்பு விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி. நட்டா,  நிதின் கட்கரி, ராம்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்ய நாயுடு, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், ராம்கோ குரூப், ஈஸ்வரி க்ரூப் நிறுவனத்தார், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக  பதவியேற்றுக்கொண்டார்.

சந்திரபாபு நாயுடு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சரானார்.

மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதில், சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேரும், பாஜகவில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடு தவிர்த்த 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமர் பெயர் பொறித்த ஆடு.. பக்ரீத்துக்கு பலி கொடுக்க விற்பனை: மும்பை போலீசார் அதிரடி

Sun Jun 16 , 2024
ராமர் பெயரை தோலில் பொறித்த ஆடு பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுக்க விற்பனைக்காக வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. நவி மும்பையில் உள்ள இறைச்சி கடை ஒன்றின் தோலில் ராமர் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட ஆடு ஒன்று பதிவிட்ட பதிவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை […]

You May Like