ராமர் பெயரை தோலில் பொறித்த ஆடு பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுக்க விற்பனைக்காக வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
நவி மும்பையில் உள்ள இறைச்சி கடை ஒன்றின் தோலில் ராமர் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட ஆடு ஒன்று பதிவிட்ட பதிவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான இந்த படம், ஈத் அல்-ஆதா (பக்ரீத்) பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இந்த படம் சித்தரித்தால் மும்பை போலீசார் அதிரடி காட்டியுள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட புகாருக்கு பதிலளிக்கும் வகையில், சிபிடி பெலாப்பூர் காவல் நிலைய குற்றப் பதிவு எண் 123/2024 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
முதற்கட்ட விவரங்களை வழங்கிய ஒரு அதிகாரி, நவி மும்பையின் சிபிடி செக்டர் ஒன்றில் உள்ள குட் லக் மட்டன் கடையில் ராம் என்ற பெயரைக் கொண்ட ஆடு விற்பனைக்கு வைக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டு, கடை உரிமையாளரை கைது செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இது மூர்க்கத்தனமானது. ‘குட் லக் மட்டன் கடை’ மூலம் ராம் பெயர் எழுதி விற்கப்படும் ஆட்டுக்குட்டி. இந்து சமூகத்தை வேண்டுமென்றே தூண்டிவிட திறந்த வெளியில் பக்ரீத் அன்று ஆடு வெட்டப்படும். வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதற்காக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டீசன்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.