இமயமலை சாரலில் ஓடிவரும் கௌசிக நதி மிகவும் புனிதமானது, அழகானது. இந்த நதிக்கரையில் தவ வாழ்வை மேற்கொண்ட விஸ்வாமித்திரர் தாய்மையின் அரவணைப்பில் இருப்பதை போல உணர்ந்தார். அதனாலேயே பலகாலம் இந் நதிக்கரையில் தவமிருந்தார். அப்போது அவரது மனதில் சித்தாஸ்ரம் பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய நியமன விரத வழிபாடுகளை பற்றியும் ஆழ்ந்து சிந்தனை செய்தது. தவபெரும் செல்வரான விஸ்வாமித்திரர் தவ ஆற்றல் மிகுந்துள்ள இப்புண்ணிய பூமிக்கு வர முடிவு செய்தார். […]