அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள், கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 6 முறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு முறையும் என மொத்தம் 7 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி அமைச்சரவைகளில் […]

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்.

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் […]

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்.   பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். இன்று காலை 7.30 மணிக்கு வி.வி.டி சிக்னல் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவையொட்டி உள்ள சாலைகளில் நடந்து சென்று தி.மு.க வேட்பாளர் […]

தூத்துக்குடி பார்லி., தொகுதியில் பாஜ வேட்பாளரைதான் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாக்குமரி பாஜ வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனிடம் கட்சியினர் அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள லோக்சாபா தேர்தலில் பாஜவின் தேசிய கூட்டணியில் தமிழகத்தில் பாமக, த.மா.கா., அமமுக, தமமுக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் உள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் பாஜ போட்டியிடும் 20 இடங்களில் […]