திமுக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி: தொண்டர்கள் அதிர்ச்சி

Minister KKSSR

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள், கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 6 முறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு முறையும் என மொத்தம் 7 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி அமைச்சரவைகளில் 4 முறை மின்சாரத்துறை அமைச்சராக பணிபுரிந்தவர். அதிமுகவில் சில காலமும், திமுகவிலும் பணிபுரிந்த அனுபவமிக்கவர்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதனை தொடர்ந்து தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரானார்.

மக்களவை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சியின் பிற அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர் வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட புயல்: 5 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Mon Apr 1 , 2024
மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று வீசிய புயலில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீசிய கடும்புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. புயல், மழையால் ஏற்பட்ட பேரிடரில் பெண் […]
West Bengal Storm

You May Like