ஏப்ரல்19 தமிழ்நாட்டில் பொது விடுமுறை – தலைமைச் செயலாளர் உத்தரவு!

tamil nadu secretariat

மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் BPO நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பத்திரப்பதிவு நடைமுறைக்கு வரும் 10 கட்டளைகள்... மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்...

Fri Apr 5 , 2024
சார் – பதிவாளர்கள், தகுந்த காரணம் இல்லாமல் பத்திரங்களை நிலுவையில் வைப்பதை தடுக்கும் வகையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் படி, 1. பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் – பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, ‘ஸ்டார் 2.0 ‘மென்பொருளில், ‘டிராப் டவுன் பாக்ஸ்’ என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும் 2. ஆவணதாரர் கோரிக்கை அடிப்படையில், […]
பதிவுத் துறை | Registration Department

You May Like