“விடாமுயற்சி தன்னம்பிக்கை இருந்தால் சாதனை படைக்கலாம்” மாணவர்களுக்கு வீரபாகு அறிவுரை…

India Cement Veerabagu advice

தாழையூத்து – திருநெல்வேலி:

இந்தியா சிமெண்ட் நிர்வாகத்தால் நடத்தப்படுகிற சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளியின் 67 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெடின் சங்கரி ஆலை துணைத் தலைவர். ஆ. வீரபாகு தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை பள்ளிச் செயலாளர் ரா.வெ.ஸ்ரீனிவாசன் வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் உ. கணேசன், வாசித்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் ஆலைத் தலைவர் கோ.சரவணமுத்து முன்னிலை வகுத்தார் .தொடர்ந்து தலைமை உரையை தி இந்தியா சிமெண்ட் லிமிடெட் ஆலை துணைத் தலைவர் ஆ. வீரபாகு தலைமை உரையாற்றினார். முதன்மை கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி,சிறப்புரை வழங்கினார்.

இந்த ஆண்டு பணி நிறைவு பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் உ. கணேசன், “உடற்கல்வி இயக்குனர் ரா ரவிசங்கர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியில் 100% தேர்ச்சி பெற வைத்த ஆசிரிய பெருமக்களுக்கும் மாநில விளையாட்டு போட்டிக்கு மாணவ மாணவியரை தகுதி பெற பயிற்சி அளித்த விளையாட்டு துறை ஆசிரியர்களுக்கும், சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தமிழ், ஆங்கில பேச்சு, கட்டுரை, ஓவியம், கையெழுத்து, திருக்குறள், ஓவியம், போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாநில அளவில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ செல்வங்கள் ஆகியோர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பள்ளி தமிழ் ஆசிரியர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து நாடகம் நடனம் பட்டிமன்றம் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை முதுகலை தமிழ் ஆசிரியை து.நான்சி தொகுத்து வழங்கினார். நிறைவாக மூத்த முதுகலை ஆசிரியர் சொ. உடையார் நன்றி கூறினார்.

இந்தியா சிமெண்ட் ஆலை துணைத்தலைவர் ஆ. வீரபாகு பேசியதாவது:-

விடா முயற்சி தன்னம்பிக்கை இருந்தால் சாதனை படைக்க முடியும்.ஒரு கழுதை வயதாகி விட்டது அதனால் பயன் இல்லை என்று சொல்லி ஒரு குழியில் தள்ளி விட்டார்கள். சில நாள் கழித்து அந்த குழியில் வெளியே இருந்த மண்ணை தட்டினார்கள். ஆனால் அந்த கழுதை தன் மேலே விழும் மண்ணைக் கண்டு அயர்ந்து விடவில்லை தன் மேலே விழும் மண்களை கீழே தள்ளி வந்து மண்ணிற்கு மேலே ஏறிவிட்டது.இப்படி மண்ணை தட்ட தட்ட கீழே தட்டி மேலே எழும்பி ஒரு நிலையில் அந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது. பல்வேறு தடைகள் வந்தாலும் அந்த தடைகளை தாண்டி முன்னேற வேண்டும் தடை கற்களை கூட படிக்கற்கள் ஆக கொண்டு வாழ்க்கையில் முன்னேறினால் தான் சாதனை படைக்க முடியும்.அதற்கு காரணம் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவைதான் காரணம். ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்று சொன்னால் அதற்கு விழிப்புணர்வும், விடா முயற்சியும் இருக்க வேண்டும்.இப்படி ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் நாம் பல உண்மைகளை கற்றுக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு தன்னம்பிக்கை, விடாம முயற்சி, இருந்தால் எந்த துறையிலும் நம்மால் சாதிக்க முடியும் என்று பேசினார்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குமாரபாளையம் அருகே பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு

Fri Apr 5 , 2024
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் காரில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது […]
Kumarapalayam Car Accident

You May Like