கடல் சீற்றம்… தனுஷ்கோடி செல்ல தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Dhanuskodi 1

ராமேஸ்வரம்: கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமும் ராமேஸ்வரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ராமேஸ்வரம், தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தைவிட நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடல் நீர் தேங்கியதால் மீனவர்கள் குடிசைகள், ஹோட்டல், சங்கு கடைகளை கடல்நீர் சூழ்ந்தது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் எழுந்த ராட்சத அலைகளால் தேசிய நெடுஞ்சாலையை கடல் நீர் கடந்து சென்றதில் 2 கி.மீ., சாலையில் சிறிய கற்கள் பரவியுள்ளன. இந்நிலை நீடித்தால் தனுஷ்கோடி சாலை அரிக்கப்பட்டு, சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திமுக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி: தொண்டர்கள் அதிர்ச்சி

Mon Apr 1 , 2024
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள், கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 6 முறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு முறையும் என மொத்தம் 7 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி அமைச்சரவைகளில் […]
Minister KKSSR

You May Like