கோவை: களத்தில் இறங்கிய திமுக வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு அறிமுக கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக கோவையில் உள்ள பீளமேடு, சிங்காநல்லூர், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் பெரியகடை வீதி பகுதியில் அமைந்துள்ள தூய மைக்கேல் பேராலயம் சென்று, கோவை மறை மாவட்ட பேராயர் தாமஸ் அக்குவினாஸ்-ஐ தேவாலயத்தில் சந்தித்து ஆதரவு கோரினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக பல்சமய மதத் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் இதன் ஒரு பகுதியாக கத்தோலிக்க பிஷப் மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ் அவர்களை சந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.மேலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் முதல்வர் அறிவித்த திட்டங்கள் சொல்லாமல் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் வெற்றியை உறுதி செய்துள்ளதாகவும் கூறினார். இது தொடர வேண்டு என்றால் திமுக வெற்றி அடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து கோனியம்மன் கோவிலுக்கு சென்றவர் அம்மனை வழிபட்டவர்.இந்த நிகழ்வுகளில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ஜிடி நாயுடு அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மலரஞ்சலி செலுத்தினார்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோடு அத்தாணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகம்

Sat Mar 23 , 2024
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள  அத்தாணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம் அத்தாணியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமை வகித்தார். […]

You May Like