ஈரோடு அத்தாணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள  அத்தாணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம் அத்தாணியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமை வகித்தார்.

மாநில விவசாய அணி துணைத் தலைவரும், அந்தியூர் தொகுதி பொறுப்பாளருமான இரா.தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர்கள் கே.ரவீந்திரன் (கோபி வடக்கு), கே.எஸ்.சரவணன் (அம்மாபேட்டை வடக்கு), எம்.சிவபாலன் (டி.என்.பாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தற்போதைய திருப்பூர் தொகுதி எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான கே.சுப்பராயனை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அறிமுகம் செய்து வைத்தார்.

இதில், திமுக பேரூர் செயலாளர்கள் காளிதாஸ் (அந்தியூர்) , செந்தில்கணேஷ் (அத்தாணி), பேரூராட்சி தலைவர்கள் பாண்டியம்மாள் (அந்தியூர்), புனிதவள்ளி செந்தில்கணேஷ் (அத்தாணி), பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எஸ்.பி.ரமேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் கே.பி.எஸ்.மகாலிங்கம், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் செபஸ்டியான், அந்தியூர் ஒன்றிய திமுக துணைச்செயலாளர் நாகேஸ்வரன் உள்பட கோபி, டி.என்.பாளையம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அறிமுக கூட்டம்

Sat Mar 23 , 2024
நாமக்கல் லோக்சபா தொகுதி  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  (கொ.ம.தே.க) வேட்பாளர் மாதேஸ்வரனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில், நாமக்கல் லோக்சபா தொகுதி, தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, நாமக்கல் சேலம் ரோட்டில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் […]

You May Like