குமாரபாளையம் அருகே பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு

Kumarapalayam Car Accident

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் காரில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த குமாரபாளையம் போலீசார், உடல்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"7-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றமில்லை" RBI என்ன சொல்கிறது..?

Sat Apr 6 , 2024
மும்பையில் கடந்த 3-ம் தேதி துவங்கி, தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 5) நிறைவடைந்தது. இந்த முறையும், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடர்கிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி […]
RBI SakthiGandaDoss

You May Like