மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏழைகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார். 3 கோடி கிராமப்புற, நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கான நேற்றைய அமைச்சரவை முடிவை மீண்டும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசின் முதல் நாளில் அமைச்சரவை எடுத்த முதல் முடிவு ஏழைகளுக்கு அதிகாரமளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களுக்கு அரசு தொடர்ந்து சேவை செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகப் பிரதமருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். வைஷ்ணவை அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஊடகப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
You May Like
-
6 months ago
ராணுவத் தளபதிகளின் மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு
-
4 months ago
மா மதுரை… உலகில் இத்தனை சிறப்புகளை கொண்ட ஒரே நகரம்…!