ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா காலமானார்; பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்…

சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

94 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.  அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி, வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள இரங்கல் குறிப்பில்,

“மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம் மற்றும் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எண்ணற்றோர் இதயங்களிலும் மனங்களிலும் அழியாத தடம் பதித்தவர். அவரது இரக்கமும் ஞானமும் பல தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். பல வருடங்களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 2020-ல் பேலூர் மடத்திற்கு நான் அவருடன் உரையாடியதை நினைவு இந்த இடத்தில் நினைவுகூருகிறேன். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன். பேலூர் மடத்தின் பக்தர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.

சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லோக்சபா தேர்தல்: 2ம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை துவக்கம்

Wed Mar 27 , 2024
2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை 28.03.2024 அன்று வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 26.04.2024 அன்று நடைபெறும். முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி […]

You May Like