லோக்சபா தேர்தல்: 2ம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை துவக்கம்

2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை 28.03.2024 அன்று வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 26.04.2024 அன்று நடைபெறும். முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்களவையின் 15  சட்டப்பேரவை தொகுதிகளில் 19.04.2024 (முதல் கட்டம்) அன்று தேர்தல் நடைபெறும். 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26.04.2024 (இரண்டாம் கட்டம்) அன்று தேர்தல் நடைபெறும்.

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தேர்தலில் இடம்பெற்றுள்ளன.

12 மாநிலங்களில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6 அன்று கடைசி நாளாகும். ஜம்மு-காஷ்மீர் தவிர, 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 5 அன்று நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 6 அன்று நடைபெறும்.

Ajayraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராணுவத் தளபதிகளின் மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு

Wed Mar 27 , 2024
நடப்பு 2024-ம் ஆண்டிற்கான ராணுவத் தளபதிகளின் மாநாட்டை புதுதில்லியில் மெய்நிகர் முறையில் 2024 மார்ச் 28 ஆம் தேதியும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01, 02-ம் தேதிகளில் நேரடியாகவும், நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் ராணுவத் தலைவர்களிடையே உரையாற்றுகிறார். இந்த மாநாடு இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமைக்கு கருத்தியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு […]

You May Like