ரயில் பயணிகளுக்கான உணவு: ஜூலை முதல் நடைமுறையில் மாற்றம் இந்திய ரயில்வே முடிவு..!

ரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் இந்தியன் ரயில்வே புதிய முறையை ஜூலையில் அறிமுகம் செய்கிறது. இனி ரயிலின் பான்ட்ரிகார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது. உணவு தயாரிப்பு ஒப்பந்தம் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையை தொடங்குவர்.

இதன்படி, வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு ரயில்களில் உள்ள பேண்ட்ரி கார் பெட்டிகளில் பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது. இந்த மாற்றத்துக்குப் பிறகு பேண்ட்ரி காரில் தண்ணீரை சூடாக்கலாம் அல்லது தேநீர் தயாரிக்கலாம். அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே. ரயில் நிலையங்களில் உள்ள சமையலறைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு ஐஆர்சிடிசி பான்ட்ரி காரை மொத்தமாக ஒரே இடத்தில் இயக்கத் தயாராகி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உணவுதான் இனி ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும். தற்போது வந்தே பாரத் ரயிலிலும் இதே அமைப்பு உள்ளது. அனைத்து பொருட்களும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பின்னர் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை அடுத்து வருகிற ஜூலை மாதம் முதல் ரயில்களில் சமையல் முறை முற்றிலும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Moscow terror attack: மாஸ்கோ குண்டுவெடிப்பு பிரதமர் மோடி கண்டனம்

Sat Mar 23 , 2024
Moscow terror attack ரஷ்யாவில் மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை அரங்கு கூடத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சுமார் 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல். அந்த நாட்டில் அண்மைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிக பயங்கரமான தாக்குதலில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
narendra modi

You May Like