நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அறிமுக கூட்டம்

நாமக்கல் லோக்சபா தொகுதி  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  (கொ.ம.தே.க) வேட்பாளர் மாதேஸ்வரனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில், நாமக்கல் லோக்சபா தொகுதி, தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, நாமக்கல் சேலம் ரோட்டில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, சின்ராஜ் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குத்துவிளக்கேற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார். தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஷ்குமார், எம்.பி., கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை அறிமுகம் செய்துவைத்து பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்து, 3 ஆண்டுகளில், தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம், பெட்ரோல் விலை குறைப்பு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு தி.மு.க., என்ன செய்தது என பட்டியலிட தொடங்கினால், 25 ஆண்டு காலத்திற்கு முன்பும், பின்பும், இந்த சாதனையை எந்த இயக்கத்தாலும் முறியடிக்க முடியாது. நாமக்கல் மாவட்டத்திற்கு தனி மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஆவின் துவக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம், ரிங்ரோடு, ஏராளமான குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கொ.ம.தே.க., வேட்பாளர் மீது அவதூறு பரப்பப்பட்ட நிலையில், எந்த சூழ்நிலையிலும், யாரும் மனம் வருத்தம் அடையக் கூடாது என்பதற்காக, வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மாதேஸ்வரனை, 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும் என அவர் கூறினர். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாம் தமிழர் கட்சி: 40 வேட்பாளர்களில் 15 பேர் மருத்துவர்கள்!

Sat Mar 23 , 2024
நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளுக்குமான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் – 2024 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்: 1) திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர் 2) வடசென்னை – டாக்டர். அமுதினி 3) தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி 4) மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன் 5) திருப்பெரும்புதூர் – டாக்டர். […]
Naam Tamil Party Candidate List

You May Like