திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம்

மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் நேற்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முருகன் தெய்வானையுடன் எழுந்தருளிய திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்; பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி வழிபாடு செய்தனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் இருவரும் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

10-ம் நாள் சூரசம்ஹார லீலை, 11-ம் நாள் பட்டாபிஷேகம், 12-ம் நாள் மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி சுமார் 3.2 கி.மீ. கிரிவலப் பாதையை கடந்து காலை 10.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலப் பாதையைச் சுற்றிலும் பல இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் எம்எல்ஏக்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), வி.வி.ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சுவிதா விமல், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் வ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் 14-ம் நாளான இன்று (ஏப்.10) சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி நடைபெறும். மாலையில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையிலான பணியாளர்கள் செய்துள்ளனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழ்நாட்டில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிப்பு

Fri Mar 29 , 2024
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. மொத்தமாக 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 85 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீது நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. […]
Tamil Nadu Lok Sabha Elections

You May Like