பாஜக கூட்டணி தமாகா தூத்துக்குடி வேட்பாளர் அறிவிப்பு

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதில், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் சேகர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் கட்சியினருடன் ஆலோசித்து வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் போட்டியிடுவார் என்று  இன்று ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். அதன் படி,  தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக கூட்டணியில் எஸ்.டி.ஆர். விஜயசீலன் போட்டியிடுகிறார்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பஞ்சு வியாபாரியிடம் தோ்தல் பறக்கும் படையினர் ரூ. 6 லட்சம் பறிமுதல்

Sat Mar 23 , 2024
கோவில்பட்டி அருகே பஞ்சு வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கோவில்பட்டி பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளருமான அழகுரமா தலைமையிலான சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காளிபாண்டி, தலைமைக் காவலா்கள் கனகராஜ், அனுசுயா, முதல்நிலைக் காவலா் ராஜகுரு ஆகியோா் ஊத்துப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவில்பட்டியிலிருந்து கடம்பூா் நோக்கிச் […]
kovilpatti

You May Like