குரும்பூர் தேர்தல் களம்: தேர்தல் வேலை செய்ய அதிமுகவினரே இல்லை

நிரந்தர பொதுச்செயலாளர், இரும்பு பெண்மணி, பெண் சிங்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ., இருந்த வரை அதிமுகவை பலமான கட்சியாக வைத்திருந்தார். அவரது மறைவிற்கு பின் கட்சி 3 துண்டாக உடைந்தது. ஒரு புறம் டி.டி.வி. தினகரன் அமமுகவை தொடங்கினார். மற்றொரு புறம் இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்.சும் தங்கள் பங்கிற்கு கட்சியை இரண்டாக்கினர். அதிமுகவில் உண்மை விசுவாசியாக இருந்த பலரும் எந்த அணியில் சேர்வது என்ற குழப்பத்தில் இருந்ததாலும், புதிதாக யாரும் கட்சியில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையே அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கடந்த சில மாதங்களுக்கு முன் மற்ற கட்சிகளுக்கு சென்றதால் அதிமுகவில் கட்சியினர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தற்போதுள்ள அதிமுகவில் அதிலும் இ.பி.எஸ். அணியில் இருக்கும் பழைய நிர்வாகிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே திமுக மேலிடம் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்தும் விட்டது. இதனால் திமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட ஆயத்தமாகிவிட்டனர். ஆனால் அதிமுகவில் இ.பி.எஸ். அணியில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட போதுமான அளவு கட்சியினர் இல்லாததால் மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வை கிழக்கு ஒன்றியம் பகுதியான குரும்பூர் பகுதியில் ஒரு காலத்தில் அதிமுகவினர் அதிகமாக இருந்தனர். ஏதாவது ஒரு பிரச்னை என்றால் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போதோ நிலைமையே வேறு. குரும்பூர் பகுதியில் கட்சியில் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். திமுக ஆட்சிக்கு வந்தநாள் வரை இதுவரை குரும்பூரில் அதிமுக சார்பில் ஒரே ஒரு முறை மட்டுமே பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதுவும் 2022 டிச.14-ம் தேதி மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடந்த  கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் கடைசியாக நடந்தது. அதன் பின்னர் இதுவரை எந்தவித ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. புதியவர்கள் யாரும் கட்சியில் சேராததாலும், பழைய நிர்வாகிகள் வயது முதிந்தவர்களாக இருப்பதாலும் அதிமுகவில் தேர்தல் பிரச்சாரத்திற்கோ, தேர்தல் வேலை செய்வதற்கோ போதுமான ஆட்கள் இல்லை என்று கட்சியின் பழைய நிர்வாகி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மனுத்தாக்கல்!

Mon Mar 25 , 2024
மதுரை நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணயில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், நிகழ்வில் திமுக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாற்றாக சி.பி.எம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் […]

You May Like