உச்சம் தொட்ட தங்கம் விலை; சவரன் 51,000 க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120க்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் அதிகரித்தது.

தமிழகத்தில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது.

இந்நிலையில், இன்று (மார்ச் 29) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது.

இதுவரை தங்கள் விலை இவ்வளவு உயர்ந்தது இல்லை. எனினும் இதனால் தங்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

Fri Mar 29 , 2024
மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் நேற்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முருகன் தெய்வானையுடன் எழுந்தருளிய திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்; பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி வழிபாடு செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ம் தேதி […]
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம்

You May Like