வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் […]

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் – தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (KKFFPO-1) மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம் தலைமையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட (முள்ளூர் துறை, ராமன்துறை, இணையம், இணையம் புத்தன்துறை, ஹெலன் காலனி,மிடலாம் & மேல் மிடலாம்) கடலோர மீனவ கிராமங்களிலுள்ள இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் மிடலாம் […]

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் என்றும் இதற்காக பல புதிய நடைமுறைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல […]

நடப்பு 2024-ம் ஆண்டிற்கான ராணுவத் தளபதிகளின் மாநாட்டை புதுதில்லியில் மெய்நிகர் முறையில் 2024 மார்ச் 28 ஆம் தேதியும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01, 02-ம் தேதிகளில் நேரடியாகவும், நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் ராணுவத் தலைவர்களிடையே உரையாற்றுகிறார். இந்த மாநாடு இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமைக்கு கருத்தியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு […]

2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை 28.03.2024 அன்று வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 26.04.2024 அன்று நடைபெறும். முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி […]

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 94 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.  அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. […]

முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். அண்மையில் பிரசல்ஸ் நகரில் முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே சிறந்த உறவுகள் குறித்து […]

இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார் (ஒரு சிறப்பு மாசு கட்டுப்பாட்டு கப்பல்), மூன்று நாள் பயணமாக நேற்று பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவைச் சென்றடைந்தது. பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதைத் தவிர, ஆசியான் பிராந்தியத்தில் கடல் மாசுபாடு குறித்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக சிறப்பு […]

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் – தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (KKFFPO-1) மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம் தலைமையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி (வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை மற்றும் நீரோடி) மற்றும் முன்சிறை ஒன்றியத்திற்குட்பட்ட (இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை & தூத்தூர் சின்னதுறை) கடலோர மீனவ கிராமங்களிலுள்ள இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் முதற்கட்ட ஆலோசனை […]

சக்ரா பவுண்டேசன், இந்தியா முழுவதும் “தியாகப் பெருஞ்சுவர் (Tribute wall)” அமைக்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.  முன்னாள் பத்திரிக்கையாளர், இப்போது திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.ராஜசேகர் சக்ரா பவுண்டேசன் நிறுவனர் – தலைவராக இருந்து இந்த பணிகளை செய்து வருகிறார். புதுச்சேரியில் இவர் அமைத்த தியாகப் பெருஞ்சுவர் (Tribute wall) குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவரை ஊக்கப்படுத்தி நாடு முழுவதும் 75 இடங்களில் இதை வையுங்கள் என்று அறிவுறுத்தினார். […]