ராமேஸ்வரம்: கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ராமேஸ்வரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ராமேஸ்வரம், தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தைவிட நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 […]

மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் […]

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியாவில் பல்வேறு அலுவலர் நிலைப் பணிகளுக்கு ஆள்சேர்க்கை நடைபெறுகிறது. பாங்க் ஆஃப் இந்தியா பணிகளில் நல்ல சம்பளம் மட்டுமல்லாமல், பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பும், அவர்களுக்கு நிதி ஆலோசனைகள் வழங்கி உதவும் திருப்தியும் வேறெங்கும் கிடைப்பது அரிது. தகுதி: இதற்கான தகுதி மற்றும் விவரங்களை பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் […]

கடந்த நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட சேவைகளின் அடிப்படையில் இது 205% உயர்ந்துள்ளது. மொத்த வணிக மதிப்பில் (ஜிஇஎம்) ரூ.4 லட்சம் கோடியுடன் இந்த நிதியாண்டை அரசு மின்னணு சந்தை நிறைவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் அதன் ஜிஇஎம் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது. இது போர்ட்டலின் தனித்துவமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு சாட்சியமாக உள்ளது. இது பொதுக் கொள்முதலில் அதிக செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் […]

வலுவான நீதித்துறை அமைப்புடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது குழுவுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகம் தனித்துவமானது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடம் தேவையில்லை என்றார. புதுதில்லியில் நேற்று நடைபெற்ற இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் 70-வது அமைப்பு தின விழாவில் உரையாற்றிய […]

தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000-க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. […]

வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை வசதிகளைப் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே 2024 மார்ச் 28-29 தேதிகளில் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின்போது, ஓகாவில் மிதவை விமானப் பராமரிப்புப் பிரிவின் உள்கட்டமைப்பை 2024, மார்ச் 28 அன்று அவர் தொடங்கி வைத்தார். வேராவல் இனாஸ் கிராமத்தில் கடலோர காவல்படையில் திருமணமாகாதோர் மற்றும் திருமணமானோருக்கான தங்குமிடங்களை திருமதி காயத்ரி அரமானே 2024, மார்ச் 29 அன்று திறந்துவைத்தார். ஓக்காவில் […]

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது. வரும், 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். பகலில் வெயில் தீவிரம் காட்டும் என, சென்னை வானிலை […]

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) மாரடைப்பால் காலமானார்.வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார். நெருப்பு கண்களுடன், வில்லத்தன பார்வை மற்றும் பயமுறுத்தும் சிரிப்பை கொண்டு வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. தெனாவெட்டான முகபாவம், வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்வற்றில் […]

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்.