தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆப., தலைமையில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று  நடைபெற்றது. தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேர்தல் ஆணையம் ஆலோசித்தது.

ராமாயணத்தின் முக்கிய பகுதி பால காண்டம்… அந்த பாலகண்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் விஸ்வாமித்திரர். பதினாறு வயது கூட நிரம்பாத பாலகனாக இருந்த ராமனை தென்தமிழகத்தின் விஜயாபதிக்கு மகரிஷி அழைத்துவர முக்கிய காரணம் உண்டு. பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் யார்…? புண்ணிய பூமி பாரத நாட்டில் தோன்றிய மகிரிஷிகளில் தனித்துவமும் நீண்ட வரலாற்று பெருமையும் உடையவர் “பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் ”. பேரரசில் சிகரமென திகழ்ந்தவர் கடும்தவத்தினால் மகரிஷிகளில் சிகரமாக விளங்கினார். பிரம்மரிஷி […]

இமயமலை சாரலில் ஓடிவரும் கௌசிக நதி மிகவும் புனிதமானது, அழகானது. இந்த நதிக்கரையில் தவ வாழ்வை மேற்கொண்ட விஸ்வாமித்திரர் தாய்மையின் அரவணைப்பில் இருப்பதை போல உணர்ந்தார். அதனாலேயே பலகாலம் இந் நதிக்கரையில் தவமிருந்தார். அப்போது அவரது மனதில் சித்தாஸ்ரம் பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய நியமன விரத வழிபாடுகளை பற்றியும் ஆழ்ந்து சிந்தனை செய்தது. தவபெரும் செல்வரான விஸ்வாமித்திரர் தவ ஆற்றல் மிகுந்துள்ள இப்புண்ணிய பூமிக்கு வர முடிவு செய்தார். […]