‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை உணர்வால் மக்களை கவர்ந்தவர். அதன் பின் விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்திரைக்கு வந்தார். விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பல திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை விஜய் டிவி-க்கு உண்டு. அவர்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர். விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவர்கள் என்றால் ஒரு சிலர்தான். […]

கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது , மருத்துவமனைகளில் தீ விபத்து ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறும். இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது, இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதில் முன்முயற்சி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் […]

ராமாயணத்தின் முக்கிய பகுதி பால காண்டம்… அந்த பாலகண்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் விஸ்வாமித்திரர். பதினாறு வயது கூட நிரம்பாத பாலகனாக இருந்த ராமனை தென்தமிழகத்தின் விஜயாபதிக்கு மகரிஷி அழைத்துவர முக்கிய காரணம் உண்டு. பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் யார்…? புண்ணிய பூமி பாரத நாட்டில் தோன்றிய மகிரிஷிகளில் தனித்துவமும் நீண்ட வரலாற்று பெருமையும் உடையவர் “பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் ”. பேரரசில் சிகரமென திகழ்ந்தவர் கடும்தவத்தினால் மகரிஷிகளில் சிகரமாக விளங்கினார். பிரம்மரிஷி […]

இமயமலை சாரலில் ஓடிவரும் கௌசிக நதி மிகவும் புனிதமானது, அழகானது. இந்த நதிக்கரையில் தவ வாழ்வை மேற்கொண்ட விஸ்வாமித்திரர் தாய்மையின் அரவணைப்பில் இருப்பதை போல உணர்ந்தார். அதனாலேயே பலகாலம் இந் நதிக்கரையில் தவமிருந்தார். அப்போது அவரது மனதில் சித்தாஸ்ரம் பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய நியமன விரத வழிபாடுகளை பற்றியும் ஆழ்ந்து சிந்தனை செய்தது. தவபெரும் செல்வரான விஸ்வாமித்திரர் தவ ஆற்றல் மிகுந்துள்ள இப்புண்ணிய பூமிக்கு வர முடிவு செய்தார். […]