முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கே…. வெற்றியை அருளும் மகா கணபதி

இமயமலை சாரலில் ஓடிவரும் கௌசிக நதி மிகவும் புனிதமானது, அழகானது. இந்த நதிக்கரையில் தவ வாழ்வை மேற்கொண்ட விஸ்வாமித்திரர் தாய்மையின் அரவணைப்பில் இருப்பதை போல உணர்ந்தார். அதனாலேயே பலகாலம் இந் நதிக்கரையில் தவமிருந்தார். அப்போது அவரது மனதில் சித்தாஸ்ரம் பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய நியமன விரத வழிபாடுகளை பற்றியும் ஆழ்ந்து சிந்தனை செய்தது.
தவபெரும் செல்வரான விஸ்வாமித்திரர் தவ ஆற்றல் மிகுந்துள்ள இப்புண்ணிய பூமிக்கு வர முடிவு செய்தார். ஆனால் அங்கு ஒரு பிரச்சனை இருப்பதையும் அறிந்தார்.. ஆம், தவ ஆற்றல் மிக்க இந்த இடத்தில் வேறு யாரும் தவம் செய்து வழிபட்டு சித்தி பெற கூடாது என்று இலங்கையின் மன்னன் இராவணன் மறைமுகமாக அரக்கர்களை ஏவி இருந்தான்.. அகத்தியருடைய பிரேதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டேன் என்பது இராவணன் கொடுத்த வாக்கு. அதனால் மாரீசன், சுபாகு போன்ற மாயாவிகள் மூலம் இங்கு யாரும் வழிபாடுகள் செய்ய விடாமல் இடையூறுகளை கொடுத்து வந்தான்.

வசிஷ்டரின் ஆசிரமத்தை கோபத்தில் நொடிப்பொழுதில் எரித்த மகரிஷிக்கு இந்த அரக்கர் கூட்டத்தை எரிக்க ஒரு நொடி போதும். விஸ்வாமித்திரர் மேற்கொள்ளும் விரதத்தின் நியமனமும், சித்தாஸ்ரம மண்ணின் மகத்துவமும் இணையும் போது கோபமானது ஒரு சிறிதும் கூட அந்நேரம் வராது.
எனவே ஆறுநாட்கள் நியமனம் பூண்டு முனிவர்களுடன் இங்கு யாகம் நடத்த வேண்டும் அதற்கு காவல் செய்ய தகுந்தவர் யார் என ஆராய்ந்தார். ஊழின் ஏற்பாடுகள் அனைத்தையும் தன் அக கண்களால் பார்த்த மகரிஷி அவர்களை வதம் செய்ய அயோத்தியில் ராமன் அவதாரம் செய்திருப்பத்தையும் அறிந்தார்.. அதற்கு மகரிசி ஆற்ற வேண்டிய கடமைகளையும் அறிந்தார்.

அயோத்தி தசரத சபைக்கு சென்று பதினாறு வயது நிரம்பாத பாலகர்களான ராம, லட்சுமணனை அழைத்து கொண்டு தமிழகத்தின் தென் பகுதியான விஜயபதிக்கு வந்தார்.
யாகத்திற்கு எந்த இடையூறும் வராமல் மேற்கொள்ளும் நியமன விரதங்கள் வெற்றி பெற விநாயகரை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தனுர் வேதங்களை ( அஸ்திர சாஸ்திரங்களை ) சிவபெருமானிடமிருந்து நேரடியாக பெற்றவர் விஸ்வாமித்திரர், ராமனின் அவதார நோக்கத்தை அவனுக்கு உணர்த்தினார். அவதார நோக்கம் நிறைவேற இந்த உலகில் உள்ள அனைத்து அஸ்திர வித்தைகளையும் அவனுக்கு அருள வேண்டும் என நினைத்தார். அதன்படி அவர் பிரதிஷ்டை செய்த கணபதியை வழிபட்டு ராமனுக்கு அஸ்திர வித்தைகளை நேரடியாக விஸ்வாமித்திரர் அருளினார். ராமனிடமிருந்து லட்சுமணும் அஸ்திர வித்தைகளை பெற்றார். இருவரும் அளவிலாத வித்தியா பலன்களை பெற்றனர்.

ஆறு நாட்கள் நடைபெற்ற யாகத்தை இரவு பகல் பாராமல் உண்ணாமல், உறங்காமல் காத்து வந்தனர் , இறுதியில் யாகத்தை கெடுக்க வந்த மாயாவி அசுரர்களை அழித்து விரட்டினார்கள். குரு நாதர் விஸ்வாமித்திரர் மனம் மகிழ்ந்தது.
இராமாயணத்தில் பாலகாண்டத்தில் சித்தாஸ்ரமம் என்று இந்த தலம் அழைக்கபடுகிறது.. விஸ்வாமித்திரர் ராம லட்சுமணனுக்கு இதன் வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம் இத்தலத்தின் பெருமைகளையும், சிறப்புகளையும் அறிய முடிகிறது.
எண்ணிய எண்ணங்களை கைகூட வைக்கும் இடம் இந்த சித்தாஸ்ரமம் என்பது மீண்டும் நிரூபணமாகியது. விஸ்வாமித்திரர் தனக்கு தபோவனம் அமைக்க சிறந்த இடமாக இதை தேர்வு செய்தார்.

இதனால் சித்தாஸ்ரமம் யாராலும் வெற்றி கொள்ளமுடியாத தலம் என்ற பெருமை கொண்டு விஜயாபதி என்று அழைக்கப்பட்டது. காசியில் தான் வணங்கிய காசி விஸ்வநாதரையும், அகிலாண்டேஸ்வரி அம்மனையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இந்த நிலத்தின் காவல் தெய்வமாகிய தில்லை காளியையும் வணங்கி வழிப்பட்டார்.
இந்த தலத்தில் விஸ்வாமித்திரமகாலிங்கம் அகிலாண்டேஸ்வரி தனிக் கோவிலாகவும் , விஸ்வாமித்திரர் தனி கோவிலாகவும் , ஓமகுண்ட கணபதி தனி கோவிலாகவும் , தில்லைகாளி தனி கோவிலாகவும் அருகருகே அமைதுள்ளது சிறப்பு.

விஸ்வாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால் விநாயகரை வழிபட்டு யாகம் செய்துள்ளார். அதனால் இந்த விநாயகரை ‘ஓமகுண்ட கணபதி’ என்ற பெயரில் தனி ஆலயமாக கொண்டு வழிபடுகின்றனர். ஓம குண்ட கணபதி சன்னிதிக்கு வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் காவல் காக்கும் விக்ரகம் இதை உணர்த்தும். மேலும் ‘ஓமகுண்ட கணபதிக்கு அருகில் விஸ்வாமித்திரர் தவமிருக்கும் விக்கிரகமும் சன்னதியில் காணலாம்.


இந்த ஓம குண்ட கணபதி சன்னதியை ஒட்டி கிணறு போல காட்சியளிக்கிறது ஒரு தீர்த்த கட்டம், இதை விஸ்வாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் என்று கூறுகின்றனர்.
விநாயகருக்கு உரிய எல்லா விழாக்களும், வழிபாடுகளும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. சங்கடங்கள் தீர சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவது வழக்கம்.. இந்த தலத்தில் ஓமகுண்ட கணபதியை எப்போது வழிபட்டாலும் சங்கடங்கள் தீர்ந்து நல்ல வழி பிறக்கும்.
எண்ணற்ற மகிமையுடையது இந்த விஜயாபதி திருத்தலம்.. அதில் ஓமகுண்ட கணபதி அருட் சன்னதி அற்புதம்.

நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
விஜயாபதி ஓமகுண்ட கணபதியை காண எப்படி செல்ல ?

திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ளது வள்ளியூர். அந்த வள்ளியூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது ராதாபுரம். அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் - விஸ்வ குரு

Sat Mar 23 , 2024
ராமாயணத்தின் முக்கிய பகுதி பால காண்டம்… அந்த பாலகண்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் விஸ்வாமித்திரர். பதினாறு வயது கூட நிரம்பாத பாலகனாக இருந்த ராமனை தென்தமிழகத்தின் விஜயாபதிக்கு மகரிஷி அழைத்துவர முக்கிய காரணம் உண்டு. பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் யார்…? புண்ணிய பூமி பாரத நாட்டில் தோன்றிய மகிரிஷிகளில் தனித்துவமும் நீண்ட வரலாற்று பெருமையும் உடையவர் “பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் ”. பேரரசில் சிகரமென திகழ்ந்தவர் கடும்தவத்தினால் மகரிஷிகளில் சிகரமாக விளங்கினார். பிரம்மரிஷி […]
viswamidrar

You May Like