ரஜினிகாந்த் 171வது படம் – லோகேஷ் கனகராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Rajnikanth 171

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் தொடர்பான புது அப்டேட்-ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது.

Rajinikanth 171 New update
Rajinikanth 171 New update

இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆனாலும் புதிய படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 171” படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் கையில் வாட்ச்களால் விலங்கு மாட்டியிருப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. மேலும், தலைவர் 171 படத்தின் டீசர் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரம்: மாமல்லன் மருத்துவமனை - CIPACA இணைந்து வழங்கும் கிராமப்புற மருத்துவ சேவை

Thu Mar 28 , 2024
ஸ்ரீ மாமல்லன் தனியார் மருத்துவமனை, காஞ்சிபுரம் பொன்னேரி கரை அடுத்த இந்திராநகர் பகுதியில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் 30 படுக்கைகள் வசதி உள்ளது. சிறுநீரகம், கண், மகப்பேறு, எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை அதற்கென சிறப்பு மருத்துவர்கள் வழங்குகின்றனர். இந்தியாவின் முன்னணி கிராமப்புற ICU சேவை வழங்குனரான சிபாக்கா நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த சிபாக்கா (CIPACA) நிறுவனம் […]
விழாவில், சேவையை துவக்கி வைத்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜா அமர்நாத் உடன் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள்

You May Like