லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் சேஷூ. தற்போது அவருக்கு 60 வயது. அவர் ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அவர் கடைசியாக நடிகர் சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் 10 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் சேஷூ சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் சேஷு மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.