தூத்துக்குடியில் நடைப்பயணமாக வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்.

 

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். இன்று காலை 7.30 மணிக்கு வி.வி.டி சிக்னல் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவையொட்டி உள்ள சாலைகளில் நடந்து சென்று தி.மு.க வேட்பாளர் கனமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் பழைய பஸ் நலையம் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர் நடைப்பயணமாக காய்கறி மார்க்கெட் முழுவதும் சென்று பின் அருகில் உள்ள பூ மார்க்கெட் சென்றார். அங்கிருந்த பெண்கள்,பொதுமக்கள் வியாபாரிகள் அனைவரிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

முதலமைச்சரை பார்த்தவுடன் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் மற்றும் வாலிபர்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவர்களுடன் பொறமையுடனும், மகிழ்ச்சியுடனும் செல்பி எடுத்துக் கொண்டார்.

அப்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுகவினர் பலர் உடனிருந்தனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நடிகர் லொள்ளு சபா சேஷூ காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி

Tue Mar 26 , 2024
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் சேஷூ. தற்போது அவருக்கு 60 வயது. அவர் ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அவர் கடைசியாக நடிகர் சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 10 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

You May Like