மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் […]

தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000-க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. […]

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது. வரும், 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். பகலில் வெயில் தீவிரம் காட்டும் என, சென்னை வானிலை […]

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. மொத்தமாக 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 85 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீது நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. […]

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120க்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது. இந்நிலையில், இன்று (மார்ச் […]

கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டுச் சேவைகளை மேலும் சிறப்பாக செய்ய காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக சென்னையை சேர்ந்த ஆப்டஸ் வேல்யு தனியார் வீட்டு வசதி நிறுவனம் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கியது. ஆப்டஸ் வேல்யு வீட்டு வசதி நிறுவனம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆப்டஸ் வேல்யூ வீட்டு வசதி நிதி […]

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளை எளிமையாகக் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் கைப்பேசி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் தொடா்பாக விவரங்களை எளிதில் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் […]

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி மூலம் வேட்பு மனு பரிசீலனை இன்று (மார்ச் 28) செய்யப்பட்டது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் […]

நெல்லை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்து குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை […]