தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்த cVIGIL மொபைல் ஆப்.. எப்படி பயன்படுத்தலாம்..?

cVIGIL App

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளை எளிமையாகக் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் கைப்பேசி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.

தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் தொடா்பாக விவரங்களை எளிதில் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் நடைபெறும் மக்களவைத் தேர்தல் தொடா்பாக எளிதில் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக சி விஜில் (cVIGIL) எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நடத்தை விதிகள், தேர்தல் செலவு தொடர்பான விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தகவல் அனுப்பியவரின் கைபேசி எண்ணுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இறுதியாக தேர்தல் அதிகாரியால் இறுதி நடவடிக்கை அறிக்கை அனுப்பப்படும். கைபேசி எண் இல்லாமல் வரும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

‘PWD’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் சம்பந்தப்பட்ட வாக்காளர், தான் ஒருமாற்றுத்திறனாளி என்பதை அதில்உள்ள பிரிவுகள் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வாக்குச்சாவடியில் அவருக்கான வசதிகள் செய்யப்படும். இதுதவிர, வாக்காளர் பதிவு, முகவரி மாற்றம், திருத்தம் அல்லது நீக்கம், வாக்குச்சாவடி அமைவிடம், விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

வேட்பாளர், அரசியல் கட்சிகளுக்கான கைபேசி செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘suvidha-nomination’ என்ற செயலியில், வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபின், அவர்களுடைய பிரமாண பத்திரங்களை பொதுமக்கள் இந்த செயலி மூலம் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட 2 நாட்களில் இந்த விவரங்களை செயலியில் பெற முடியும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கைப்பேசி செயலிகளை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து: மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை ரயில் சேவையில் மாற்றம்

Fri Mar 29 , 2024
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் […]
Train

You May Like