தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளை எளிமையாகக் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் கைப்பேசி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் தொடா்பாக விவரங்களை எளிதில் கையாளும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் […]