முறைமாமனை திருமணம் செய்த இந்திரஜா ஷங்கர்… பிரம்மாண்டமாக கொண்டாட்டம்..!

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை உணர்வால் மக்களை கவர்ந்தவர். அதன் பின் விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்திரைக்கு வந்தார்.

விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பல திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை விஜய் டிவி-க்கு உண்டு. அவர்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.

விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவர்கள் என்றால் ஒரு சிலர்தான். ரோபோ ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்திருந்தார். குண்டாக இருந்த அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். பின் சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசனைச் சந்தித்து தனது மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார். திருமணத்துக்கு பிறகு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திரையுலக நுழைவு

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் தன் தந்தையை போலவே திரையுலகில் ஜொலிக்க விரும்பினார். விஜய் தயாரித்த ‘பிகில்’ படத்தின் மூலம் தன் நடிப்பை தொடங்கினார். அதன் பின் சில படங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் அவர் ஏற்று நடித்த பாண்டியம்மாள் கதாபாத்திரம் அவரைப் போல குண்டாக இருக்கும் பல பெண்களுக்கு ஒரு ஆறுதலைத் தந்தது. குண்டாக இருப்பது தவறில்லை என்ற ஒரு கருத்தையும் பதிய வைத்தது. உடல் எடை கூடி இருப்பது சாதிக்க ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை பறைசாற்றியது.

கோலாகல திருமணம்

இந்திரஜா ஷங்கர் தனது முறைமாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இந்த திருமண கொண்டாட்டம் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்து வந்தது. மார்ச் 23-ம் தேதி திருமண ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். உறவினர்கள் முன்னிலையில், கோலாகலமாக கொண்டாடப்பட்ட இவர்களது திருமண விழா, திரையுலக பிரபலங்களுக்காக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நடிகர் சூரி திருமண ரிசப்ஷனில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் மணமக்களுக்கு அறிவுரைகள் கூறியதுடன், மேடைக்கு வந்ததுமே கவரில் பணக்கட்டுடன் மொய் வைத்திருக்கிறார். அதை வாங்கிய ரோபோ ஷங்கர் “ரொம்ப வெயிட்டா இருக்கே” என ரியாக்ட் செய்தது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோடை விடுமுறையை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா..?

Tue Mar 26 , 2024
உங்கள் வீட்டுச் சிறுவர், சிறுமியருக்குக் கோடை விடுமுறையைப் பயன் படுத்தச் சொல்லிக் கொடுங்கள்… குழந்தைப் பருவத்து இன்பமயமான விடுமுறை நாட்கள் திரும்ப வரப் போவதில்லை. 6-வது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இது பற்றி நன்கு திட்டமிடுவது அவசியம். இன்னும் 20-30 ஆண்டுகள் கடந்த பின்னும், அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்கள் அனுபவமும், எண்ணி எண்ணி இன்புறத் தகுந்த வகையிலும், பயனுள்ள வகையிலும் அமையக் கீழ்க்கண்ட […]
summer vacation 2

You May Like