கோடை விடுமுறையை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா..?

summer vacation 2

உங்கள் வீட்டுச் சிறுவர், சிறுமியருக்குக் கோடை விடுமுறையைப் பயன் படுத்தச் சொல்லிக் கொடுங்கள்… குழந்தைப் பருவத்து இன்பமயமான விடுமுறை நாட்கள் திரும்ப வரப் போவதில்லை.

6-வது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இது பற்றி நன்கு திட்டமிடுவது அவசியம். இன்னும் 20-30 ஆண்டுகள் கடந்த பின்னும், அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்கள் அனுபவமும், எண்ணி எண்ணி இன்புறத் தகுந்த வகையிலும், பயனுள்ள வகையிலும் அமையக் கீழ்க்கண்ட வழிகளைக் கற்றுத் தருவோம். அவர்களைத் திட்டமிட வைப்போம்.

1) நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு அனுப்பித் தங்கி வரச் செய்தல்

2) பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அழைத்துச் செல்லுதல்

3) சுற்றுலா

4) நீண்ட தூர நடை, சைக்கிள் பயணம்

5) மலை ஏறுதல்

6) கதைப் புத்தகங்கள் படித்தல்

7) விவசாயம், செடி, மரம் வளர்த்தல்

8) சிறு தொழிற் கூடங்களைப் பார்த்து வருதல்

9) விஞ்ஞான விளையாட்டுக் கருவிகள் செய்தல்

10) கைவினைப் பொருட்கள் செய்தல்

11) ஓவியம், கவிதை, கட்டுரை

12) உடல் திறனை வளர்த்துக் கொள்ள உடற்பயிற்சி, யோகா

13) நமது உடலின் செயல்பாடு, ஆரோக்கியம் பற்றித் தெரிந்து கொள்ளுதல்

14) பேச்சுத் திறன்

15) ஜோக் சொல்லும் திறன்

16) புதிய நண்பர்களைத் தேடி உறுவாக்கிக் கொள்ளுதல்

17) ஆங்கில இலக்கணம், சொற்கள் கற்றுக் கொள்ளுதல்

18) நல்ல தமிழ், தாய் மொழி தவறில்லாமல் படிக்க, எழுத

19) ஹிந்தி, பிற மொழிகள் கற்றுக் கொள்ளுதல்

20) நமக்குப் பிடித்த துறையில் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் – (உ-ம்)    விஞ்ஞானம், வரலாறு…

21) செய்தித்தாள் படித்தல் – நாட்டு நடப்பு, பொது அறிவு

22) டைப்பிங்

23) கூகுள் மூலம் தகவல் தேடுதல்

24) நல்ல தேசபக்தி பாடல்கள், செய்யுள்கள், ஸ்லோகங்கள் மனப்பாடம் செய்தல்

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டில்லி JNU: மாணவர் சங்க தேர்தல்: இடது சாரி கூட்டணி வெற்றி

Tue Mar 26 , 2024
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடது சாரி கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். கடைசியாக கடந்த 2019-ல் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோவிட் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மாணவர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் […]

You May Like