பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 103.25 அடி நீர் வரத்து : 554.051 கன அடி வெளியேற்றம் : 804.75 கன அடி சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 114.30 அடி நீர்வரத்து : NIL வெளியேற்றம் : NIL மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 75.05 அடி நீர் வரத்து […]
மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் காரில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது […]
தாழையூத்து – திருநெல்வேலி: இந்தியா சிமெண்ட் நிர்வாகத்தால் நடத்தப்படுகிற சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளியின் 67 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெடின் சங்கரி ஆலை துணைத் தலைவர். ஆ. வீரபாகு தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை பள்ளிச் செயலாளர் ரா.வெ.ஸ்ரீனிவாசன் வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் உ. கணேசன், வாசித்தார். இந்தியா சிமெண்ட்ஸ் ஆலைத் தலைவர் கோ.சரவணமுத்து முன்னிலை […]
கோவை அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நூற்பாலை குடோனிலிருந்து […]
ராமேஸ்வரம்: கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ராமேஸ்வரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ராமேஸ்வரம், தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தைவிட நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 […]
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று Sekhmet கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்லோன் ராஜ், மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3 பேரும் மதுபான விடுதி ஊழியர்கள். இந்த விவகாரத்தில் மதுபான விடுதி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளர் அசோக்குமார் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முருகன் தெய்வானையுடன் எழுந்தருளிய திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்; பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி வழிபாடு செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ம் தேதி […]
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் […]
அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது: […]
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, பொம்மன்பட்டி, மேல் நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மனட்டி கிராமத்தில் அமைத்து இருந்தது. ஆனால், நெல் கொள்முதல் நிலையம் அமைத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை என்பதால் […]