வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) மாரடைப்பால் காலமானார்.வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார். நெருப்பு கண்களுடன், வில்லத்தன பார்வை மற்றும் பயமுறுத்தும் சிரிப்பை கொண்டு வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. தெனாவெட்டான முகபாவம், வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்வற்றில் […]

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் தொடர்பான புது அப்டேட்-ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது. இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக […]

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் சேஷூ. தற்போது அவருக்கு 60 வயது. அவர் ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அவர் கடைசியாக நடிகர் சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 10 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை உணர்வால் மக்களை கவர்ந்தவர். அதன் பின் விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்திரைக்கு வந்தார். விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பல திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை விஜய் டிவி-க்கு உண்டு. அவர்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர். விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவர்கள் என்றால் ஒரு சிலர்தான். […]