அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்காலிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.
அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.