தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகள் எழும்ப தொடங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ்வில் அருகே ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று காலை டெல்லி நோக்கிச் சென்ற டபுள் டக்கர் பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் […]
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 103.25 அடி நீர் வரத்து : 554.051 கன அடி வெளியேற்றம் : 804.75 கன அடி சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 114.30 அடி நீர்வரத்து : NIL வெளியேற்றம் : NIL மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 75.05 அடி நீர் வரத்து […]
ராமர் பெயரை தோலில் பொறித்த ஆடு பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுக்க விற்பனைக்காக வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. நவி மும்பையில் உள்ள இறைச்சி கடை ஒன்றின் தோலில் ராமர் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட ஆடு ஒன்று பதிவிட்ட பதிவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை […]
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணி கட்சியினர் கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து […]
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏழைகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார். 3 கோடி கிராமப்புற, நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கான நேற்றைய அமைச்சரவை முடிவை மீண்டும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசின் முதல் நாளில் அமைச்சரவை எடுத்த முதல் முடிவு ஏழைகளுக்கு அதிகாரமளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களுக்கு […]
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக மனோகர் லால் இன்று பொறுப்பேற்று கொண்டார். மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் அகர்வால், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர். முன்னாள் மின்துறை அமைச்சர் திரு ராஜ்குமார் சிங் அவரை அன்புடன் வரவேற்றார். மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்திய அமைச்சருக்கு மின்சார அமைச்சகத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகள் […]
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முருகன், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி அரசின் கொள்கைகளை வெளியிடுவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார். ஏழைகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் முருகன், பிரதமரின் வீட்டுவசதி […]
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மாணவர்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத்திட்டத்தின் தேவை மற்றும் நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் இந்தியாவிற்கான பி.டெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திட்டங்களிலிருந்து முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவார்கள். வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனம் ஒன்றின் பாடத்திட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பி.டெக் […]
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் என்று […]