தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000-க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. […]

வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை வசதிகளைப் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே 2024 மார்ச் 28-29 தேதிகளில் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின்போது, ஓகாவில் மிதவை விமானப் பராமரிப்புப் பிரிவின் உள்கட்டமைப்பை 2024, மார்ச் 28 அன்று அவர் தொடங்கி வைத்தார். வேராவல் இனாஸ் கிராமத்தில் கடலோர காவல்படையில் திருமணமாகாதோர் மற்றும் திருமணமானோருக்கான தங்குமிடங்களை திருமதி காயத்ரி அரமானே 2024, மார்ச் 29 அன்று திறந்துவைத்தார். ஓக்காவில் […]

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது. வரும், 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். பகலில் வெயில் தீவிரம் காட்டும் என, சென்னை வானிலை […]

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120க்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது. இந்நிலையில், இன்று (மார்ச் […]

கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டுச் சேவைகளை மேலும் சிறப்பாக செய்ய காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக சென்னையை சேர்ந்த ஆப்டஸ் வேல்யு தனியார் வீட்டு வசதி நிறுவனம் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கியது. ஆப்டஸ் வேல்யு வீட்டு வசதி நிறுவனம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆப்டஸ் வேல்யூ வீட்டு வசதி நிதி […]

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் […]

முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். அண்மையில் பிரசல்ஸ் நகரில் முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே சிறந்த உறவுகள் குறித்து […]