அணுசக்தி உச்சிமாநாடு: பெல்ஜியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

அண்மையில் பிரசல்ஸ் நகரில் முதலாவது அணுசக்தி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தற்காக பெல்ஜியம் பிரதமர் டி குரூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையே சிறந்த உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். வர்த்தகம், முதலீடு, தூய்மை தொழில்நுட்பங்கள், குறைக்கடத்திகள், மருந்துகள், பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

ஐரோப்பிய யூனியனுக்கு பெல்ஜியத்தின் தலைமையின் கீழ் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்று இரு தலைவர்களும் உறுதி செய்தனர்.

பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். மேற்கு ஆசிய பிராந்தியம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் மோதலில் அமைதி மற்றும் பாதுகாப்பை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா காலமானார்; பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்...

Wed Mar 27 , 2024
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 94 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.  அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. […]
சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

You May Like