காசாவில் உடனடிப் போர் நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்

காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.

இதனால் காசா மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி உடனடியாக போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கா தனது விட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் வாக்கெடுப்பில் இருந்து விலகியதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர் நாடுகளில் 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து வாக்களித்தன.

காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். நீடித்த போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

மேலும் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் நடைப்பயணமாக வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tue Mar 26 , 2024
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்.   பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். இன்று காலை 7.30 மணிக்கு வி.வி.டி சிக்னல் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவையொட்டி உள்ள சாலைகளில் நடந்து சென்று தி.மு.க வேட்பாளர் […]

You May Like