உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ்வில் அருகே ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று  காலை டெல்லி நோக்கிச் சென்ற டபுள் டக்கர் பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் […]

ராமர் பெயரை தோலில் பொறித்த ஆடு பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுக்க விற்பனைக்காக வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. நவி மும்பையில் உள்ள இறைச்சி கடை ஒன்றின் தோலில் ராமர் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட ஆடு ஒன்று பதிவிட்ட பதிவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை […]

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணி கட்சியினர் கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து […]

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏழைகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார். 3 கோடி கிராமப்புற, நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கான நேற்றைய அமைச்சரவை முடிவை மீண்டும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசின் முதல் நாளில் அமைச்சரவை எடுத்த முதல் முடிவு ஏழைகளுக்கு அதிகாரமளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களுக்கு […]

மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக மனோகர் லால் இன்று பொறுப்பேற்று கொண்டார். மின்துறை அமைச்சகத்தின் செயலாளர்  பங்கஜ் அகர்வால், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர். முன்னாள் மின்துறை அமைச்சர் திரு ராஜ்குமார் சிங் அவரை அன்புடன் வரவேற்றார். மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்திய அமைச்சருக்கு மின்சார அமைச்சகத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகள் […]

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முருகன், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி அரசின் கொள்கைகளை வெளியிடுவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார். ஏழைகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் முருகன், பிரதமரின் வீட்டுவசதி […]

மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நியாயமான, அமைதியான, எளிதில் அணுகக்கூடிய, அனைவரும் பங்கேற்கும் சுதந்திரமான தேர்தலுக்கு ஆணையம் உறுதி பூண்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் முதல் கட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார்,  சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் […]

மும்பையில் கடந்த 3-ம் தேதி துவங்கி, தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 5) நிறைவடைந்தது. இந்த முறையும், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடர்கிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி […]

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று வீசிய புயலில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீசிய கடும்புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. புயல், மழையால் ஏற்பட்ட பேரிடரில் பெண் […]

கடந்த நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட சேவைகளின் அடிப்படையில் இது 205% உயர்ந்துள்ளது. மொத்த வணிக மதிப்பில் (ஜிஇஎம்) ரூ.4 லட்சம் கோடியுடன் இந்த நிதியாண்டை அரசு மின்னணு சந்தை நிறைவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் அதன் ஜிஇஎம் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது. இது போர்ட்டலின் தனித்துவமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு சாட்சியமாக உள்ளது. இது பொதுக் கொள்முதலில் அதிக செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் […]