அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது: […]