சக்ரா பவுண்டேசன், இந்தியா முழுவதும் “தியாகப் பெருஞ்சுவர் (Tribute wall)” அமைக்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் பத்திரிக்கையாளர், இப்போது திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.ராஜசேகர் சக்ரா பவுண்டேசன் நிறுவனர் – தலைவராக இருந்து இந்த பணிகளை செய்து வருகிறார். புதுச்சேரியில் இவர் அமைத்த தியாகப் பெருஞ்சுவர் (Tribute wall) குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவரை ஊக்கப்படுத்தி நாடு முழுவதும் 75 இடங்களில் இதை வையுங்கள் என்று அறிவுறுத்தினார். […]